Skip to main content

Posts

பள்ளியில் வேப்பமரம்

பெரிய நகரங்களில் உள்ள பள்ளியில் பயிலும் குழந்தைகள் சளி அல்லது இருமல் என்றால் பள்ளி நிர்வாகம் குழந்தைகளை பள்ளிக்கு வர வேண்டாம் என்று பெற்றோர்களிடம் முன்பே சொல்லி விடுகிறார்கள். ஏனென்றால் மற்ற குழந்தைகளுக்கும் கிருமிகள் பரவக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் இந்த பரிந்துரைகளை பெற்றோர்களிடம் சொல்வதில்லை. கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பொதுவாக வேப்ப மரங்கள் நடப்படுவதால் கிருமிகள் குழந்தைகளிடம் பரவுவது தடுக்கப்படுகின்றது. அறிவியல் ஆய்வு :

கழுத்து மற்றும் முதுகு வலி வீட்டு வைத்தியம்

 கழுத்து மற்றும் முதுகு வலி வீட்டு வைத்தியம் உடலில் கழுத்து மற்றும் முதுகு பாகங்களில் ரத்த ஓட்டம் சீரான நிலையில் இல்லாத போது வலி ஏற்படுகின்றது. இதை தவிர்க்க பின்வரும் வீட்டு வைத்தியத்தை எடுத்துக்கொண்டால் பலன் அளிக்கும். நான்கு அல்லது ஐந்து பூண்டு எடுத்து கொண்டு தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த உடன் இதை குவளையில் எடுத்து கொண்டு சிறிது தேன் சேர்த்து அருந்த வேண்டும். இது சிறிது நேரத்தில் ரத்த ஓட்டத்தை சீராக்கி வலியை நீக்கும். இது மட்டும் அல்லாமல் வலி உள்ள இடங்களுக்கு உடல் பயிற்சி அளித்தால் கூடுதல் பலன் அளிக்கும்.           

உடல் நல பிரமிடு

நமது உயிரும் உடலும் சிறப்பாக இயங்க மூன்று முக்கிய பங்கீடு அவசியம். அந்த மூன்று காற்று (oxygen) , நீர் (water) மற்றும் உணவு (carbohydrate) ஆகும். இவை நாம் தினசரி எடுத்து கொண்டாலும் இதன் அளவு மற்றும் இதில் எதற்கு முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது  அறிந்து கொள்ள வேண்டும்.  பொதுவாக நாம் முதலில் கவனம் செலுத்துவது உணவுக்குத்தான். மற்ற நீர் மற்றும் காற்றுக்கு அடுத்த படியாக முன்னுரிமை கொடுத்து எடுத்து கொண்டு வருகிறோம். உணவுக்கு அதிகமாக முன்னுரிமை கொடுத்து எடுத்து கொள்வதால் மற்ற இரண்டின் சமநிலை பாதிக்கப்படும் அல்லது அதிகமாக உடலுக்கு தேவைப்படும்.  உடல் நல பிரமிடு image அடிப்படையில் oxygen அணு காற்று , நீர் மற்றும் உணவில் மூன்றிலும் பங்கிடப்பட்டுள்ளது. Hydrogen அணு நீர் மற்றும் உணவு இரண்டிலும் பங்கிடப்பட்டுள்ளது. கார்பன் அணு உணவில் மட்டும் பங்கிடப்பட்டுள்ளது.  இதன் பங்கிட்டு விகிதம் 3:2:1 என்ற அளவில் இருக்கிறது. இந்த பங்கிட்டு விகிதத்தின் அடிப்படையில் நாம் அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டியது முதலில் காற்றுக்கு அடுத்த படியாக நீர் மற்றும் மூன்றாவதாக உணவு. அதாவது உடல் பயிற்...

முட்டை அறிவியல் பின்னணி

முட்டை ஒரு சிறந்த முழு உணவாகும். முட்டையில் உள்ள உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் அதிகம். இதனால்தான் இரண்டு முட்டைகளை சாப்பிட்டால்கூட ஒரு மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி ஏற்படும்.  பொதுவாக பள்ளிகளில் முட்டைகள் கட்டாயமாக மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மாணவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றது. மற்றோன்று அவர்களின் மூளையின் சக்தி மற்றும் திறனை அதிகரிக்கின்றது. இதனால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க உதவுகின்றது. உதாரணமாக மூளை வளர்ச்சியில்லாத குழந்தைகள் கூட பள்ளிக்கூடத்தில் சேர்த்து முட்டை போன்ற ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது நாளடைவில் அவர்களின் மூளை திறன் அதிகரித்து அவர்களின் கல்வித்திறனும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.  இப்போது முட்டையில் உள்ள அறிவியலை பார்க்கலாம்.  கோழிகள் முட்டைகளை இடும்போது அதில் கோழிக்குஞ்சுகள் வளரத்தேவையான அனைத்து ஊட்ட சத்துக்களையும் முட்டைக்கு அளிக்கின்றது. எலும்புகள், தசைகள் மற்றும் மூளைக்கு தேவையான சத்துக்கள் அடங்கும்.  அதில் முக்கியமான சத்து என்னவென்றால் கோலின் ( choline ) ஆகும். கோல...

ஒரு ஆட்டின் கதை

Need independence day for goat  குட்டி ஆடு : அம்மா, நான் புல்லின் மீது ஓடி விளையாட வேண்டும் அம்மா , என்னை கூட்டிட்டு போகிறீர்களா. அம்மா ஆடு : சரி டா குட்டி நாம போகலாம். நன்றாக மழை பொழிந்து முடிந்த நேரம், அம்மாவும் குட்டி ஆடும் மகிழ்ச்சியாக புல்லை மேய்ந்து கொண்டு விளையாண்டது. சாயங்காலம் 5 மணி ஆனதும் ஆடு மேய்ப்பவர் வந்ததும் ஆட்டினை கூட்டிச்சென்றார். ஆட்டு கொட்டகையில் அடைத்து வைத்தார். குட்டி : அம்மா , என்னுடைய அப்பா எங்கம்மா எனக்கு அப்பா இல்லையாமா என கேட்டது. அம்மா : உனக்கு அப்பா இருந்தார் ஆனா இப்ப இல்லம்மா. குட்டி : ஏன்மா , அப்பா எங்க போய்ட்டார். அம்மா : அப்பாவ சாமிகிட்ட காவு குடுத்துட்டாங்கம்மா.. குட்டி : என்னமா என்ன சொல்றிங்க என்று புரியாமல் கேட்டது. அம்மா : அதுவா ஒன்னும் இல்லமா, சாமி கிட்ட போயிருக்காங்கமா ஒரு நாள் வருவாங்கனு சமாதானம் செய்தது. என்ன சொல்வது என்று தெரியாமல் குட்டியின் முகம் வாடிவிட்டது. மறு நாள் ஆடு வாங்குபவர் கொட்டகைக்கு வந்தார். ஆடு மேய்ப்பவரிடம் ஒரு இளம் குட்டி வேண்டும் என்று கேட்டார்.  ஆடு மேய்ப்பவர் அவரிடம் பெரிய ஆடு இருக்கிறது வாங்கி கொள்ளலாமே இளம் குட்டி...

மூட்டு வலி நிவாரணம்

மூட்டு வலி நிவாரணம்  உடல் இயங்குவதற்கு மூட்டு எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. எலும்புகள் வலுவாக இருக்குமானால் உடல் இயக்கமும் எளிதாக இருக்கும். மூட்டு எலும்புகள் பலவீனமாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று இன்றைய உணவு பழக்க மாறுபாடுகள். அதிக மாவுச்சத்து மற்றும் குக்கரில் சமைக்கபடும் உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் அதிகமாக மாமிச உணவுகள், இந்த உணவுகளால் உடல் எடை அதிகரித்து மூட்டுகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றது.  இந்த அழுத்தம் மூட்டு இடையில் உள்ள synovial fluid (மூட்டுறை திரவம்) அளவை குறைக்கின்றது. இந்த synovial fluid பயன்பாடு நம் மூட்டு இடையில் உள்ள உராய்வை குறைத்து வலி இல்லாமல் சீராக நடக்க உதவுகின்றது.  பொதுவாக வயது ஆவதால் எலும்பில் உள்ள திசுக்களின் அடர்த்தி குறைந்து கொண்டே வரும். இதன் அடர்த்தி அதிகமாக இருப்பதற்கு மெக்னீசியம் மற்றும் கால்சியம் அளவு மிக முக்கியமாக இருக்கின்றது. இந்த மெக்னீசியம் மற்றும் கால்சியம் குறைபாட்டினால் எலும்பில் உள்ள திசுக்களின் அடர்த்தி குறைந்து கால் வீக்கம் மற்றும் நடக்க முடியாமல் போகும் நிலைமை ஏற்படுகிறது. இந்த நோய் osteop...

மஞ்சள் காமாலை மருந்து

கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் ஹெப்படைட்டிஸ் 'பி' மற்றும் 'சி' ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.

சர்க்கரை நோய் மருந்து

உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.

மருத்துவ செடிகள்

துளசி - சுவாச விருத்தி  கற்றாழை - சரும விருத்தி  காரட் - கண் விருத்தி  தாத்தா செடி - காய விருத்தி  எலுமிச்சை - உடல் சுத்தி  கரிசலாங்கண்ணி - தேச சுத்தி  கருவேப்பிலை - உடல் விருத்தி நித்ய கல்யாணி - புற்று சுத்தி  கீழா நெல்லி - மஞ்சள் காமாலை மருந்து  வல்லாரை - மூளை விருத்தி தும்பை செடி - விஷம் முறுக்கி

சரும நிவாரணி சோற்றுக் கற்றாழை - Aloe Vera

சோற்றுக் கற்றாழை (aloe vera) சரும நோய்களுக்கு மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அலர்ஜி , பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளினால் சருமத்தில் ஏற்படும் வலி மற்றும் அரிப்புகளுக்கு மிக சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.       

Followers