ஓம் எனும் ஒலி அனைவரும் அறிந்த ஒன்று. இந்த ஒலி சக்தியை அளிக்குமா என்றால் அதற்கு ஆம் என்றே சொல்ல வேண்டும். (அ +உ +ம் = ஓம் ) இந்த அடி நாதத்தை தினம் தோறும் ஒலிப்போர்க்கு எந்த ஒரு ஆரோக்ய குறைபாடும் வருவதில்லை. இந்த ஓம் என்ற உயரிய சக்தி நம் ஆரோக்கியத்தில் எவ்வாறு பங்கு அளிக்கிறது என்பதை பார்ப்போம். நாம் காலையில் எழுந்து நமது உடலை சுத்தம் செய்ய மலம் கழித்தல், பல் விலக்குதல் மற்றும் குளித்தல் ஆகியவற்றை செய்கிறோம். இதனை புற உடலை சுத்தம் செய்தல் என்று பொருள். ஆனால் தன் அக உடலை சுத்தம் செய்வதில்லை. புற உடல் சுத்தத்தால் வெளித்தோற்றம் நன்றாகவே இருக்கும். ஆனால் நம் மனம் மற்றும் மூளை சீரற்ற நிலையில் இயங்கும். பொதுவாக மனதில் பதட்டமோ, சோர்வோ ,சோம்பலோ , பயமோ மற்றும் தேவையில்லாத எண்ணங்களோ வந்து கொண்டு இருக்கும். இவை நம் மூளை மற்றும் மனதின் சீரற்ற இயக்கத்தினால் வருபவை. இந்த சீரற்ற நிலையை ஒருங்கிணைந்த சக்தியாக மாற்ற வல்லது இந்த ஓம் என்ற ஒலி. காலையில் வயல் வெளிகளிலோ அல்லது தோட்டத்திலோ உள்ள புற்களில் பனி நிறைந்து நீர் துளிகளாக மேலே இருக்கும். அதை நாம் பார்ப்பதற்கு அழகாக தோன்றலாம். ஆனால் புற்களுக்கு...