கல்லிரல் நமது உடல் நலமாக இருக்க இரத்தத்தை சுத்தப்படுத்தி நமது உடல் பாகங்களுக்கு அனுப்புகிறது. அந்த கல்லிரல் சுத்தமாக்கும் வழிகள் பார்க்கலாம். நெல்லிக்கனி நான்கு விதை நீக்கப்பட்டு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். கற்றாழை சாறு சிறிதளவு , கொத்தமல்லி இவை அனைத்தும் சாறாக எடுத்து கொள்ள வேண்டும். சிறிதளவு கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து பானமாக அருந்தலாம். இந்த பானம் கல்லிரலை சுத்தப்படுத்தி நமது உடல் இரத்தம் சுத்தமாக இருக்க உதவுகிறது. இதை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதோ சிகரெட் பிடிப்பதோ கூடாது. அதிகமான எண்ணெயினால் ஆன உணவுகளை தவிர்த்து கீரை வகைகள் குறிப்பாக கரிசலாங்கண்ணி கீரை மற்றும் பச்சை காய் கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். கல்லிரல் சிறப்பாக செயல்பட இரவு ஆழ்ந்த தூக்கம் மிகவும் அவசியம். வெகு நேரம் விழித்து இருத்தல் கூடாது.