Skip to main content

Posts

இருதய அடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்

இருதய அடைப்புக்கான முதன்மை காரணங்களாக இருப்பது அதிக மது, புகை பிடிக்கும் பழக்கம் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றது. இருதயம் சிறப்பாக செயல்படுவதற்கு சுத்தமான காற்று, தண்ணீர், தாவர வகை உணவு மற்றும் உடல் உழைப்பு, இந்நான்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இந்த நான்கில் ஒன்று அதிக காலமாக குறைவு அல்லது அசுத்தம் ஏற்பட்டால் கூட இருதய அடைப்பு ஏற்படுகின்றது. இதில் சுத்தமான தண்ணீர் இருதய ரத்த ஓட்டத்திற்கு மிக முக்கியம். சுத்தமான தண்ணீர் தவிர வேற எந்தவிதமான தண்ணீர் (மது) அதிகமாக மற்றும் நாளைடைவில் எடுத்துக்கொள்ளும் போது இருதயத்தில் கொழுப்பு சேர்ந்து அடைப்பை ஏற்படுத்தும். சுத்தமான காற்று இதயம் இயங்குவதற்கு தேவைப்படுகின்றது. புகை பிடிக்கும் பழக்கத்தினால் சுத்தமான காற்று அசுத்தம் அடைந்து அது நுரையீரல் இயக்கத்தை தடைபடுத்தும். நுரையீரல் இயக்கம் தடை ஏற்படும்போது இதயத்திற்கு தேவையான காற்றின் அளவு குறைந்து மாரைடப்பு ஏற்படுகின்றது. இந்த அசுத்தமான காற்று மற்றும் நீரினால் ரத்த ஓட்ட தடை ஏற்பட்டு கால் மற்றும் கைகளில் வீக்கம் ஏற்படுகின்றது. இந்த வீக்கம் அல்லது கையில் வலி ஏற்படுவது மாரடைப்புக்கான...
Recent posts

zandu balm science

Zandu balm ஒரு வலி நிவாரணியாக பயன்படுத்தப்படுகின்றது. இதில் இரண்டு வகை உள்ளன. ஒன்று வெள்ளை நிறத்தில் இருக்கும். மற்றோன்று சிவப்பு நிறத்தில் மெடிக்களில் கிடைக்கும். வெள்ளை நிற zandu balm லேசான தலைவலி மற்றும் இருமல் இவற்றை குணப்படுத்தக்கூடியது. சிவப்பு நிற zandu balm அதிக எரிச்சல் மற்றும் வலிகளை குணப்படுத்தக்கூடியது. இதன் அறிவியல் பார்ப்பதற்கு முன் இதற்கான பாட்டி வைத்தியங்களை பார்ப்போம். zandu balm வருவதற்கு முன் தலைவலி மற்றும் இருமல் வந்தால் சூடத்தை எண்ணெயில் சூடு படுத்தி அதை தலை மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்து வலிகளை குணப்படுத்தினார்கள். காதில் ஏற்படும் அதிக வலி மற்றும் கால் மற்றும் கை எரிச்சலினால் ஏற்படும் வலிகளை காய்ந்த மிளகாயை எண்ணெயில் சூடுபடுத்தி அந்த எண்ணெயை தடவி தாங்க முடியாத வலிகளை குணப்படுத்தினார்கள். இப்பொழுது zandu balm அறிவியலை காணலாம். வெள்ளை நிற zandu balm சூடம் மற்றும் நீலகிரி தைலம் முக்கிய மருந்தாக கொண்டு தயாரிக்கப்படுகின்றது. சிவப்பு  நிற zandu balm Capsaicin Extract (மிளகாயில் இருந்து பெறப்பட்ட மூலப்பொருள்) மற்றும் நீலகிரி தைலம் முக்கிய மருந்தாக கொண்டு தயாரிக்...

உமிழ்நீர் சுரப்பின் பின் உள்ள அறிவியல்

நாம் சாப்பிடும் போது உணவை நன்றாக மென்று கூழ்ம நிலைக்கு மாற்றி நல்ல உணவு செரிமானத்திற்கு உமிழ்நீர் உதவுகின்றது என்பதை அனைவரும் அறிவீர்கள்.  இந்த உமிழ்நீர் எவ்வாறு மற்றும் எப்போது சுரக்கும் என்பதற்கான அறிவியல் பற்றி காணலாம்.  1. நாம் சாப்பிடும் போது வாய் அசைவு மற்றும் உணவின் சுவை நாக்கின் உணர்வு நரம்புகள் மூலமாக கடத்தப்பட்டு உமிழ்நீர் சுரப்பி தூண்டப்படுகிறது. இதனால் தேவையான அளவு உமிழ் நீர் சுரக்கின்றது. 2. அடுத்ததாக புளிப்பு சுவை உள்ள உணவு பொருட்களை சாப்பிடும் போது அதிகமாக உமிழ் நீர் சுரக்கும் உதாரணமாக புளி, ஊறுகாய் மற்றும் எலுமிச்சை இவற்றை சாப்பிடும்போது அதிகமாக சுரக்கும். ஏன் புளிப்பு சார்ந்த உணவை சாப்பிட்டால் அதிகமாக சுரக்கின்றது?  புளிப்பு உணவு மற்றும் பழங்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது எடுத்துக்கொள்ளும்போது சிட்ரிக் அமிலம் பற்களை அரித்து சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனால் புளிப்பு சுவையை அறிந்தவுடன் பற்களை பாதுகாக்க உமிழ்நீர் சுரப்பி உமிழ் நீரை சுரக்கின்றது. உண்மையில் புளிப்பு சுவை உள்ள சிட்ரிக் அமிலம் பற்களை மட்டும் அல்ல நம் உடலில் உள்ள எலும்பைக்கூட அரித்து சேதப்...

ஏன் காய்கறிகளும் பழங்களையும் எடுத்து கொள்வது அவசியம்?

மனித உயிர்கள் உருவாக்கத்திற்கு தேவையான மிக முக்கிய மற்றும் அடிப்படை மூலக்கூறுகளாக கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மூன்று மூலக்கூறுகளும் அதிக அளவில் அல்லது சம பங்கு அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது.  இது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கொண்டுள்ளதால் உடல் வளர்ச்சி, ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறனுக்கு மிக பெரிய அளவில் உதவுகின்றது. இதில் உடலுக்கு தேவையில்லாத பொருட்கள் இல்லாததால் உடலில் கெட்ட கொழுப்புக்களை உருவாக்குவதில்லை. மாறாக கெட்ட கொழுப்பு உடலில் இருந்தால் அதை உட்கிரகித்து உடலில் இருந்து நீக்குகின்றன.  காய்கறிகளும் பழங்களும் அதிகம் எடுக்காமல் எண்ணெயில் பொறித்த உணவுகள் மற்றும் நீரற்ற காய்ந்த தின்பண்டங்கள் மற்றும் உடலுக்கு ஒவ்வாத உணவுகள் மற்றும் மது பானங்களை எடுக்கும் போது உடல் வளர்ச்சி , ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் பாதிக்கப்படுகின்றன. இது நாளடைவில் உடல் உறுப்புகளை பாதிக்கின்றன.   மேற்கூறிய உணவுகளில் சம அல்லது அதிக அளவு கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் இல்லாததை இதற்கு காரணம். இயற்கை உணவுகளை எடுத்து கொள்வத...

ஆபத்து நேரங்களில் சோடா ஏன் கொடுக்கப்படுகின்றது?

மனிதர்கள் மயக்கம் அடையும் நேரத்தில் சோடா கொடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இதன் அறிவியல் பின்னணி என்ன என்பதை காணலாம். மயக்கம் நமது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடை ஏற்படும் போது oxygen பற்றாக்குறை மூளையில் ஏற்படுகின்றது. இதனால் நாம் மயக்க நிலையை அடைகின்றோம்.  ரத்த ஓட்டம் செல்லாததிற்கு முக்கிய காரணம் இதயம் இயக்கம் சீராக இல்லாமல் மெதுவாக இயங்க ஆரம்பிக்கின்றது. இதனால் மூளைக்கு தேவையான ரத்தம் செல்வதில்லை. இதயம் சீராக இயங்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் தண்ணீர் அளவு மற்றும் இதயம் இயங்குவதற்கு தேவையான சோடியம் , பொட்டாசியம் , கால்சியம் மற்றும் மெக்னீசியம் அவசியம். இந்த அயனிகள் குறைந்தால் இதயம் இயங்க தேவையான மின்சமநிலை குறையும். முக்கியமாக சோடியம் அளவு குறையும் பொது இதயம் இயங்க தேவையான மின் சமிக்ஞைகள் (electrical signals) உற்பத்தி குறைகின்றது. இந்த மின் சமிக்ஞைகள் இதய இயக்கத்தின் வேகத்தை  அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது. இதனால் மூளை ரத்த ஓட்டம் சீராகின்றது. மயக்கம் தெளிகின்றது. இந்த சோடியம் சோடாவில் இருப்பதால்தான் சோடா கொடுக்கப்படுகின்றது.

பள்ளியில் வேப்பமரம்

பெரிய நகரங்களில் உள்ள பள்ளியில் பயிலும் குழந்தைகள் சளி அல்லது இருமல் என்றால் பள்ளி நிர்வாகம் குழந்தைகளை பள்ளிக்கு வர வேண்டாம் என்று பெற்றோர்களிடம் முன்பே சொல்லி விடுகிறார்கள். ஏனென்றால் மற்ற குழந்தைகளுக்கும் கிருமிகள் பரவக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் இந்த பரிந்துரைகளை பெற்றோர்களிடம் சொல்வதில்லை. கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பொதுவாக வேப்ப மரங்கள் நடப்படுவதால் கிருமிகள் குழந்தைகளிடம் பரவுவது தடுக்கப்படுகின்றது. அறிவியல் ஆய்வு :

கழுத்து மற்றும் முதுகு வலி வீட்டு வைத்தியம்

 கழுத்து மற்றும் முதுகு வலி வீட்டு வைத்தியம் உடலில் கழுத்து மற்றும் முதுகு பாகங்களில் ரத்த ஓட்டம் சீரான நிலையில் இல்லாத போது வலி ஏற்படுகின்றது. இதை தவிர்க்க பின்வரும் வீட்டு வைத்தியத்தை எடுத்துக்கொண்டால் பலன் அளிக்கும். நான்கு அல்லது ஐந்து பூண்டு எடுத்து கொண்டு தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த உடன் இதை குவளையில் எடுத்து கொண்டு சிறிது தேன் சேர்த்து அருந்த வேண்டும். இது சிறிது நேரத்தில் ரத்த ஓட்டத்தை சீராக்கி வலியை நீக்கும். இது மட்டும் அல்லாமல் வலி உள்ள இடங்களுக்கு உடல் பயிற்சி அளித்தால் கூடுதல் பலன் அளிக்கும்.           

உடல் நல பிரமிடு

நமது உயிரும் உடலும் சிறப்பாக இயங்க மூன்று முக்கிய பங்கீடு அவசியம். அந்த மூன்று காற்று (oxygen) , நீர் (water) மற்றும் உணவு (carbohydrate) ஆகும். இவை நாம் தினசரி எடுத்து கொண்டாலும் இதன் அளவு மற்றும் இதில் எதற்கு முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது  அறிந்து கொள்ள வேண்டும்.  பொதுவாக நாம் முதலில் கவனம் செலுத்துவது உணவுக்குத்தான். மற்ற நீர் மற்றும் காற்றுக்கு அடுத்த படியாக முன்னுரிமை கொடுத்து எடுத்து கொண்டு வருகிறோம். உணவுக்கு அதிகமாக முன்னுரிமை கொடுத்து எடுத்து கொள்வதால் மற்ற இரண்டின் சமநிலை பாதிக்கப்படும் அல்லது அதிகமாக உடலுக்கு தேவைப்படும்.  உடல் நல பிரமிடு image அடிப்படையில் oxygen அணு காற்று , நீர் மற்றும் உணவில் மூன்றிலும் பங்கிடப்பட்டுள்ளது. Hydrogen அணு நீர் மற்றும் உணவு இரண்டிலும் பங்கிடப்பட்டுள்ளது. கார்பன் அணு உணவில் மட்டும் பங்கிடப்பட்டுள்ளது.  இதன் பங்கிட்டு விகிதம் 3:2:1 என்ற அளவில் இருக்கிறது. இந்த பங்கிட்டு விகிதத்தின் அடிப்படையில் நாம் அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டியது முதலில் காற்றுக்கு அடுத்த படியாக நீர் மற்றும் மூன்றாவதாக உணவு. அதாவது உடல் பயிற்...

முட்டை அறிவியல் பின்னணி

முட்டை ஒரு சிறந்த முழு உணவாகும். முட்டையில் உள்ள உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் அதிகம். இதனால்தான் இரண்டு முட்டைகளை சாப்பிட்டால்கூட ஒரு மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி ஏற்படும்.  பொதுவாக பள்ளிகளில் முட்டைகள் கட்டாயமாக மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மாணவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றது. மற்றோன்று அவர்களின் மூளையின் சக்தி மற்றும் திறனை அதிகரிக்கின்றது. இதனால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க உதவுகின்றது. உதாரணமாக மூளை வளர்ச்சியில்லாத குழந்தைகள் கூட பள்ளிக்கூடத்தில் சேர்த்து முட்டை போன்ற ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது நாளடைவில் அவர்களின் மூளை திறன் அதிகரித்து அவர்களின் கல்வித்திறனும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.  இப்போது முட்டையில் உள்ள அறிவியலை பார்க்கலாம்.  கோழிகள் முட்டைகளை இடும்போது அதில் கோழிக்குஞ்சுகள் வளரத்தேவையான அனைத்து ஊட்ட சத்துக்களையும் முட்டைக்கு அளிக்கின்றது. எலும்புகள், தசைகள் மற்றும் மூளைக்கு தேவையான சத்துக்கள் அடங்கும்.  அதில் முக்கியமான சத்து என்னவென்றால் கோலின் ( choline ) ஆகும். கோல...

ஒரு ஆட்டின் கதை

Need independence day for goat  குட்டி ஆடு : அம்மா, நான் புல்லின் மீது ஓடி விளையாட வேண்டும் அம்மா , என்னை கூட்டிட்டு போகிறீர்களா. அம்மா ஆடு : சரி டா குட்டி நாம போகலாம். நன்றாக மழை பொழிந்து முடிந்த நேரம், அம்மாவும் குட்டி ஆடும் மகிழ்ச்சியாக புல்லை மேய்ந்து கொண்டு விளையாண்டது. சாயங்காலம் 5 மணி ஆனதும் ஆடு மேய்ப்பவர் வந்ததும் ஆட்டினை கூட்டிச்சென்றார். ஆட்டு கொட்டகையில் அடைத்து வைத்தார். குட்டி : அம்மா , என்னுடைய அப்பா எங்கம்மா எனக்கு அப்பா இல்லையாமா என கேட்டது. அம்மா : உனக்கு அப்பா இருந்தார் ஆனா இப்ப இல்லம்மா. குட்டி : ஏன்மா , அப்பா எங்க போய்ட்டார். அம்மா : அப்பாவ சாமிகிட்ட காவு குடுத்துட்டாங்கம்மா.. குட்டி : என்னமா என்ன சொல்றிங்க என்று புரியாமல் கேட்டது. அம்மா : அதுவா ஒன்னும் இல்லமா, சாமி கிட்ட போயிருக்காங்கமா ஒரு நாள் வருவாங்கனு சமாதானம் செய்தது. என்ன சொல்வது என்று தெரியாமல் குட்டியின் முகம் வாடிவிட்டது. மறு நாள் ஆடு வாங்குபவர் கொட்டகைக்கு வந்தார். ஆடு மேய்ப்பவரிடம் ஒரு இளம் குட்டி வேண்டும் என்று கேட்டார்.  ஆடு மேய்ப்பவர் அவரிடம் பெரிய ஆடு இருக்கிறது வாங்கி கொள்ளலாமே இளம் குட்டி...

Followers