Skip to main content

முட்டை அறிவியல் பின்னணி

முட்டை ஒரு சிறந்த முழு உணவாகும். முட்டையில் உள்ள உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் அதிகம். இதனால்தான் இரண்டு முட்டைகளை சாப்பிட்டால்கூட ஒரு மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி ஏற்படும். 

பொதுவாக பள்ளிகளில் முட்டைகள் கட்டாயமாக மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மாணவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றது. மற்றோன்று அவர்களின் மூளையின் சக்தி மற்றும் திறனை அதிகரிக்கின்றது. இதனால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க உதவுகின்றது.

உதாரணமாக மூளை வளர்ச்சியில்லாத குழந்தைகள் கூட பள்ளிக்கூடத்தில் சேர்த்து முட்டை போன்ற ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது நாளடைவில் அவர்களின் மூளை திறன் அதிகரித்து அவர்களின் கல்வித்திறனும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. 

இப்போது முட்டையில் உள்ள அறிவியலை பார்க்கலாம். 

கோழிகள் முட்டைகளை இடும்போது அதில் கோழிக்குஞ்சுகள் வளரத்தேவையான அனைத்து ஊட்ட சத்துக்களையும் முட்டைக்கு அளிக்கின்றது. எலும்புகள், தசைகள் மற்றும் மூளைக்கு தேவையான சத்துக்கள் அடங்கும். 

அதில் முக்கியமான சத்து என்னவென்றால் கோலின் (choline) ஆகும். கோலின் மூளையில் அசிட்டைல் கோலின் (Acetylcholine) உற்பத்திக்கு உதவுகின்றது. அசிட்டைல் கோலின் என்ற வேதிப்பொருள்தான் நரம்பின் வழியாக மூளையின் கட்டளைகளை உடலின் மற்ற பாகங்களுக்கு கடத்துகின்றது. இது மூளையில் இல்லை என்றால் கட்டளைகளை உடலுக்கு கடத்த முடியாமல் அவர்கள் குழந்தைகள் போல் நடந்து கொள்வார்கள். இதை மருத்துவத்தில் alzheimer disease என்று அழைப்பார்கள். 

இந்த நோயுள்ளவர்கள் முட்டைகள் தினமும் எடுத்துக்கொள்வதன் மூலம் இதிலிருந்து சரியாக வாய்ப்பு உள்ளது. 

மருத்துவத்துறையில் இந்த அசிட்டைல் கோலின் உடலில் ஒட்டும் patch ஆக கிடைக்கின்றது. இதன் விலை அதிகம். 

விலை மலிவாக கிடைக்கும் முட்டையை எடுத்துக்கொள்வதன் மூலம் மூளை வளர்ச்சி மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். உதாரணமாக இது பத்து மாத்திரைகளின் சத்துக்களுக்கு சமம் எந்த வித பின் பக்க விளைவுகளும் இருக்காது.                             

Comments

Followers

Popular posts from this blog

ஆபத்து நேரங்களில் சோடா ஏன் கொடுக்கப்படுகின்றது?

மனிதர்கள் மயக்கம் அடையும் நேரத்தில் சோடா கொடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இதன் அறிவியல் பின்னணி என்ன என்பதை காணலாம். மயக்கம் நமது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடை ஏற்படும் போது oxygen பற்றாக்குறை மூளையில் ஏற்படுகின்றது. இதனால் நாம் மயக்க நிலையை அடைகின்றோம்.  ரத்த ஓட்டம் செல்லாததிற்கு முக்கிய காரணம் இதயம் இயக்கம் சீராக இல்லாமல் மெதுவாக இயங்க ஆரம்பிக்கின்றது. இதனால் மூளைக்கு தேவையான ரத்தம் செல்வதில்லை. இதயம் சீராக இயங்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் தண்ணீர் அளவு மற்றும் இதயம் இயங்குவதற்கு தேவையான சோடியம் , பொட்டாசியம் , கால்சியம் மற்றும் மெக்னீசியம் அவசியம். இந்த அயனிகள் குறைந்தால் இதயம் இயங்க தேவையான மின்சமநிலை குறையும். முக்கியமாக சோடியம் அளவு குறையும் பொது இதயம் இயங்க தேவையான மின் சமிக்ஞைகள் (electrical signals) உற்பத்தி குறைகின்றது. இந்த மின் சமிக்ஞைகள் இதய இயக்கத்தின் வேகத்தை  அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது. இதனால் மூளை ரத்த ஓட்டம் சீராகின்றது. மயக்கம் தெளிகின்றது. இந்த சோடியம் சோடாவில் இருப்பதால்தான் சோடா கொடுக்கப்படுகின்றது.

உமிழ்நீர் சுரப்பின் பின் உள்ள அறிவியல்

நாம் சாப்பிடும் போது உணவை நன்றாக மென்று கூழ்ம நிலைக்கு மாற்றி நல்ல உணவு செரிமானத்திற்கு உமிழ்நீர் உதவுகின்றது என்பதை அனைவரும் அறிவீர்கள்.  இந்த உமிழ்நீர் எவ்வாறு மற்றும் எப்போது சுரக்கும் என்பதற்கான அறிவியல் பற்றி காணலாம்.  1. நாம் சாப்பிடும் போது வாய் அசைவு மற்றும் உணவின் சுவை நாக்கின் உணர்வு நரம்புகள் மூலமாக கடத்தப்பட்டு உமிழ்நீர் சுரப்பி தூண்டப்படுகிறது. இதனால் தேவையான அளவு உமிழ் நீர் சுரக்கின்றது. 2. அடுத்ததாக புளிப்பு சுவை உள்ள உணவு பொருட்களை சாப்பிடும் போது அதிகமாக உமிழ் நீர் சுரக்கும் உதாரணமாக புளி, ஊறுகாய் மற்றும் எலுமிச்சை இவற்றை சாப்பிடும்போது அதிகமாக சுரக்கும். ஏன் புளிப்பு சார்ந்த உணவை சாப்பிட்டால் அதிகமாக சுரக்கின்றது?  புளிப்பு உணவு மற்றும் பழங்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது எடுத்துக்கொள்ளும்போது சிட்ரிக் அமிலம் பற்களை அரித்து சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனால் புளிப்பு சுவையை அறிந்தவுடன் பற்களை பாதுகாக்க உமிழ்நீர் சுரப்பி உமிழ் நீரை சுரக்கின்றது. உண்மையில் புளிப்பு சுவை உள்ள சிட்ரிக் அமிலம் பற்களை மட்டும் அல்ல நம் உடலில் உள்ள எலும்பைக்கூட அரித்து சேதப்...

எப்போது மூளை (BRAIN) சுறுசுறுப்பாக இயங்குகிறது

எப்போது மூளை (BRAIN) சுறுசுறுப்பாக இயங்குகிறது. எந்த நிலைகளில் அதன் இயக்க நிலை மாறுபடுகிறது. நாம் தினசரி செய்யும் செயல்களான நடத்தல், உட்காருதல் மற்றும் தூங்குதல் இந்த மூன்று நிலைகளிலும் அதன் இயக்க நிலை மாறுபடும். எடுத்துக்காட்டாக நாம் பள்ளியில் படிக்கும்போது மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனித்து கொண்டிருப்போம். நேரம் ஆகும்போது சிலர் தூங்கி  விழுந்து கொண்டிருப்பார்கள். அதை சில மாணவர்கள் பார்த்து நகைத்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஆசிரியர் மட்டும் பாடம் எடுத்து கொண்டிருப்பார். அவருக்கு தூக்கம் வர சாத்தியமில்லை. ஏனென்றால் அவருடைய மூளை சிறப்பாக  இயங்கி கொண்டிருப்பதை அதற்கு காரணம். அவர் நின்றோ அல்லது நடந்து கொண்டோ இருக்கும் பொது அவர் கால்களில் உள்ள நரம்புகள் மூளையே தூண்டுவதன் மூலமாக அது சிறப்பாக  இயங்கி கொண்டிருக்கும்.  மாணவர்கள் அமர்ந்த நிலையில் இருக்கும் போது அவர்களின் கால் நரம்புகளின் இயக்கம் அதிகமாக தூண்டபடுவதில்லை இதனால்தான் அவர்கள் மூளை (SEMI ACTIVE) பாதி அளவிலான வேலையே செய்கிறது. இதனால் சிலருக்கு தூக்க நிலையை அடைவார்கள். அதனால்தான் ஆசிரியர் அவர்களை தூ...