மூட்டு வலி நிவாரணம் உடல் இயங்குவதற்கு மூட்டு எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. எலும்புகள் வலுவாக இருக்குமானால் உடல் இயக்கமும் எளிதாக இருக்கும். மூட்டு எலும்புகள் பலவீனமாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று இன்றைய உணவு பழக்க மாறுபாடுகள். அதிக மாவுச்சத்து மற்றும் குக்கரில் சமைக்கபடும் உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் அதிகமாக மாமிச உணவுகள், இந்த உணவுகளால் உடல் எடை அதிகரித்து மூட்டுகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றது. இந்த அழுத்தம் மூட்டு இடையில் உள்ள synovial fluid (மூட்டுறை திரவம்) அளவை குறைக்கின்றது. இந்த synovial fluid பயன்பாடு நம் மூட்டு இடையில் உள்ள உராய்வை குறைத்து வலி இல்லாமல் சீராக நடக்க உதவுகின்றது. பொதுவாக வயது ஆவதால் எலும்பில் உள்ள திசுக்களின் அடர்த்தி குறைந்து கொண்டே வரும். இதன் அடர்த்தி அதிகமாக இருப்பதற்கு மெக்னீசியம் மற்றும் கால்சியம் அளவு மிக முக்கியமாக இருக்கின்றது. இந்த மெக்னீசியம் மற்றும் கால்சியம் குறைபாட்டினால் எலும்பில் உள்ள திசுக்களின் அடர்த்தி குறைந்து கால் வீக்கம் மற்றும் நடக்க முடியாமல் போகும் நிலைமை ஏற்படுகிறது. இந்த நோய் osteop...