Skip to main content

Posts

Showing posts from October, 2025

ஏன் காய்கறிகளும் பழங்களையும் எடுத்து கொள்வது அவசியம்?

மனித உயிர்கள் உருவாக்கத்திற்கு தேவையான மிக முக்கிய மற்றும் அடிப்படை மூலக்கூறுகளாக கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மூன்று மூலக்கூறுகளும் அதிக அளவில் அல்லது சம பங்கு அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது.  இது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கொண்டுள்ளதால் உடல் வளர்ச்சி, ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறனுக்கு மிக பெரிய அளவில் உதவுகின்றது. இதில் உடலுக்கு தேவையில்லாத பொருட்கள் இல்லாததால் உடலில் கெட்ட கொழுப்புக்களை உருவாக்குவதில்லை. மாறாக கெட்ட கொழுப்பு உடலில் இருந்தால் அதை உட்கிரகித்து உடலில் இருந்து நீக்குகின்றன.  காய்கறிகளும் பழங்களும் அதிகம் எடுக்காமல் எண்ணெயில் பொறித்த உணவுகள் மற்றும் நீரற்ற காய்ந்த தின்பண்டங்கள் மற்றும் உடலுக்கு ஒவ்வாத உணவுகள் மற்றும் மது பானங்களை எடுக்கும் போது உடல் வளர்ச்சி , ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் பாதிக்கப்படுகின்றன. இது நாளடைவில் உடல் உறுப்புகளை பாதிக்கின்றன.   மேற்கூறிய உணவுகளில் சம அல்லது அதிக அளவு கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் இல்லாததை இதற்கு காரணம். இயற்கை உணவுகளை எடுத்து கொள்வத...

ஆபத்து நேரங்களில் சோடா ஏன் கொடுக்கப்படுகின்றது?

மனிதர்கள் மயக்கம் அடையும் நேரத்தில் சோடா கொடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இதன் அறிவியல் பின்னணி என்ன என்பதை காணலாம். மயக்கம் நமது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடை ஏற்படும் போது oxygen பற்றாக்குறை மூளையில் ஏற்படுகின்றது. இதனால் நாம் மயக்க நிலையை அடைகின்றோம்.  ரத்த ஓட்டம் செல்லாததிற்கு முக்கிய காரணம் இதயம் இயக்கம் சீராக இல்லாமல் மெதுவாக இயங்க ஆரம்பிக்கின்றது. இதனால் மூளைக்கு தேவையான ரத்தம் செல்வதில்லை. இதயம் சீராக இயங்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் தண்ணீர் அளவு மற்றும் இதயம் இயங்குவதற்கு தேவையான சோடியம் , பொட்டாசியம் , கால்சியம் மற்றும் மெக்னீசியம் அவசியம். இந்த அயனிகள் குறைந்தால் இதயம் இயங்க தேவையான மின்சமநிலை குறையும். முக்கியமாக சோடியம் அளவு குறையும் பொது இதயம் இயங்க தேவையான மின் சமிக்ஞைகள் (electrical signals) உற்பத்தி குறைகின்றது. இந்த மின் சமிக்ஞைகள் இதய இயக்கத்தின் வேகத்தை  அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது. இதனால் மூளை ரத்த ஓட்டம் சீராகின்றது. மயக்கம் தெளிகின்றது. இந்த சோடியம் சோடாவில் இருப்பதால்தான் சோடா கொடுக்கப்படுகின்றது.

Followers