நாம் சாப்பிடும் போது உணவை நன்றாக மென்று கூழ்ம நிலைக்கு மாற்றி நல்ல உணவு செரிமானத்திற்கு உமிழ்நீர் உதவுகின்றது என்பதை அனைவரும் அறிவீர்கள். இந்த உமிழ்நீர் எவ்வாறு மற்றும் எப்போது சுரக்கும் என்பதற்கான அறிவியல் பற்றி காணலாம்.
1. நாம் சாப்பிடும் போது வாய் அசைவு மற்றும் உணவின் சுவை நாக்கின் உணர்வு நரம்புகள் மூலமாக கடத்தப்பட்டு உமிழ்நீர் சுரப்பி தூண்டப்படுகிறது. இதனால் தேவையான அளவு உமிழ் நீர் சுரக்கின்றது.
2. அடுத்ததாக புளிப்பு சுவை உள்ள உணவு பொருட்களை சாப்பிடும் போது அதிகமாக உமிழ் நீர் சுரக்கும் உதாரணமாக புளி, ஊறுகாய் மற்றும் எலுமிச்சை இவற்றை சாப்பிடும்போது அதிகமாக சுரக்கும்.
ஏன் புளிப்பு சார்ந்த உணவை சாப்பிட்டால் அதிகமாக சுரக்கின்றது?
புளிப்பு உணவு மற்றும் பழங்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது எடுத்துக்கொள்ளும்போது சிட்ரிக் அமிலம் பற்களை அரித்து சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனால் புளிப்பு சுவையை அறிந்தவுடன் பற்களை பாதுகாக்க உமிழ்நீர் சுரப்பி உமிழ் நீரை சுரக்கின்றது.
உண்மையில் புளிப்பு சுவை உள்ள சிட்ரிக் அமிலம் பற்களை மட்டும் அல்ல நம் உடலில் உள்ள எலும்பைக்கூட அரித்து சேதப்படுத்தும்.
எவ்வாறு உமிழ் நீர் இந்த அரிப்பை தடுக்கின்றது என்பதை காணலாம். உமிழ் நீர் காரத்தன்மை உள்ள நீர் அதாவது இதில் உள்ள சோடியம் பைகார்போனேட் என்ற உப்பு மற்றும் மற்ற தாது உப்புக்கள் சிட்ரிக் அமிலத்தின் அமிலத்தன்மை அதிகமாகாமல் சமநிலை படுத்துகின்றது. இதனால் பற்கள் சேதம் தடுக்கப்படுகின்றது.
ஆனால் நீண்ட காலமாக புளிப்பு சுவை உள்ள பழம் மற்றும் உணவு எடுக்கும்போது பற்கள் மற்றும் எலும்புகள் பாதிப்படையலாம்.
3. அடுத்ததாக சுவையான உணவை சாப்பிட எண்ணினால் கூட உமிழ் நீர் அதிகமாக சுரக்கும். உதாரணமாக பிரியாணி , புரோட்டா மற்றும் கல்யாண சாப்பாடு. இதை சுவையின் காரணமாக நாம் அதிகமாக சாப்பிடுவோம் என்று உமிழ்நீர் சுரப்பி அறிந்து உணவை நன்றாக கூழ்ம நிலைக்கு மாற்ற உமிழ் நீரை அதிகமாக சுரக்கின்றது.
4. அடுத்ததாக நாம் பசியால் இருக்கும் போது அல்லது அதிக தாகத்தில் இருக்கும் போது உமிழ் நீர் சுரக்கின்றது. ஏனென்றால் பசி உணர்வை ஏற்படுத்த நம் வயிறு அதிகமாக ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை சுரக்கின்றது.
இது அதிகமாக சுரந்தால் இதன் அமிலத்தன்மை காரணமாக நம் வயிறு குடல்கள் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம். இதை காரத்தன்மையால் சமப்படுத்த உமிழ் நீர் சுரந்து வயிற்றுக்குள் சென்று அமிலத்தன்மையை சமப்படுத்துகின்றது.
ஆனால் இது ஒரு அளவுக்கு சமாளிக்கும். அதிக நேரம் பசியோடு இருந்து சாப்பிடாமல் இருக்கும் போது அமிலத்தன்மை அதிகரித்து குடலை சேதப்படுத்தும்.
இதை தவிர்க்க வழிமுறைகள்:
1. புளிப்பு சுவை உள்ள பழம் மற்றும் உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள கூடாது.
2. இதன் அமிலத்தின் வீரியத்தை குறைக்க நீருடன் சேர்ந்து அருந்தலாம். உதாரணமாக எலுமிச்சை அப்படியே பற்களில் படாமல் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
3. அதிக சுவை உள்ள உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்வதை தவிர்க்கலாம்.
4. பசி எடுக்கும் போது சாப்பிட வேண்டும் அதிக நேரம் பசியுடன் இருத்தல் கூடாது.
5. நீரை குவளையில் வாய் வைத்து குடிப்பது உமிழ் நீர் சுரப்பை அதிகப்படுத்தும். இது வயிற்றின் அமிலத்தன்மையை சமப்படுத்தி குடல்களை பாதுகாக்கும்.

Comments
Post a Comment