இருதய அடைப்புக்கான முதன்மை காரணங்களாக இருப்பது அதிக மது, புகை பிடிக்கும் பழக்கம் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றது.
இருதயம் சிறப்பாக செயல்படுவதற்கு சுத்தமான காற்று, தண்ணீர், தாவர வகை உணவு மற்றும் உடல் உழைப்பு, இந்நான்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
இந்த நான்கில் ஒன்று அதிக காலமாக குறைவு அல்லது அசுத்தம் ஏற்பட்டால் கூட இருதய அடைப்பு ஏற்படுகின்றது.
இதில் சுத்தமான தண்ணீர் இருதய ரத்த ஓட்டத்திற்கு மிக முக்கியம். சுத்தமான தண்ணீர் தவிர வேற எந்தவிதமான தண்ணீர் (மது) அதிகமாக மற்றும் நாளைடைவில் எடுத்துக்கொள்ளும் போது இருதயத்தில் கொழுப்பு சேர்ந்து அடைப்பை ஏற்படுத்தும்.
சுத்தமான காற்று இதயம் இயங்குவதற்கு தேவைப்படுகின்றது. புகை பிடிக்கும் பழக்கத்தினால் சுத்தமான காற்று அசுத்தம் அடைந்து அது நுரையீரல் இயக்கத்தை தடைபடுத்தும்.
நுரையீரல் இயக்கம் தடை ஏற்படும்போது இதயத்திற்கு தேவையான காற்றின் அளவு குறைந்து மாரைடப்பு ஏற்படுகின்றது.
இந்த அசுத்தமான காற்று மற்றும் நீரினால் ரத்த ஓட்ட தடை ஏற்பட்டு கால் மற்றும் கைகளில் வீக்கம் ஏற்படுகின்றது. இந்த வீக்கம் அல்லது கையில் வலி ஏற்படுவது மாரடைப்புக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
இருதய அடைப்பை தடுக்கும் நடவடிக்கைகள்:
1. மது மற்றும் புகை பழக்கத்தை முற்றிலுமாக தவிர்த்தல்.
2. சமூகத்தில் மற்றும் வீட்டில் இந்த பழக்கங்களுக்கு முற்றிலுமாக அனுமதி மறுத்தல்.
3. சுத்தமான தாவர வகை உணவுகள், தண்ணீர் எடுத்து கொள்ளுதல்.
4. உடல் உழைப்பு அல்லது உடல் பயிற்சி செய்தல்.
5. கை மற்றும் கால்களில் வீக்கமோ, வலியோ அல்லது உடல் சரியில்லாமல் இருந்தால்
மது , புகை மற்றும் இறைச்சி உணவுகளை எடுத்து கொள்ளக்கூடாது.
6. இரவு நேரங்களில் இறைச்சி எடுத்து கொள்ளக்கூடாது.
7. அதிகமாக இறைச்சி எடுத்து கொண்டாலும் ரத்த ஓட்டம் தடைபட்டு இருதய அடைப்பு ஏற்படலாம்.
8. காலை எழுந்ததும் மற்றும் தூங்க செல்லும் முன்னும் தண்ணீர் நன்றாக அருந்த வேண்டும்.
9. மது மற்றும் புகை பிடித்தலுக்கு செய்யும் செலவை நிறுத்தி குழந்தைகள் படிப்பு ,மருத்துவ செலவு அல்லது அவர்களுக்கான சேமிப்பில் பணத்தை போடலாம்.
10. நெஞ்சு வலி ஏற்பட்டால் பூண்டு எடுத்து சூடு நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இதில் சரியாகவில்லை என்றால் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும்.

Comments
Post a Comment