Skip to main content

ஓம் எனும் ஆரோக்ய சக்தி

ஓம் எனும் ஒலி அனைவரும் அறிந்த ஒன்று. இந்த ஒலி சக்தியை அளிக்குமா என்றால் அதற்கு ஆம் என்றே சொல்ல வேண்டும். (அ +உ +ம் = ஓம்) இந்த அடி நாதத்தை தினம் தோறும் ஒலிப்போர்க்கு எந்த ஒரு ஆரோக்ய குறைபாடும் வருவதில்லை. 

இந்த ஓம் என்ற உயரிய சக்தி நம் ஆரோக்கியத்தில் எவ்வாறு பங்கு அளிக்கிறது என்பதை பார்ப்போம்.


நாம் காலையில் எழுந்து நமது உடலை சுத்தம் செய்ய மலம் கழித்தல், பல் விலக்குதல் மற்றும் குளித்தல் ஆகியவற்றை செய்கிறோம். இதனை புற உடலை சுத்தம் செய்தல் என்று பொருள். ஆனால் தன் அக உடலை சுத்தம் செய்வதில்லை. புற உடல் சுத்தத்தால் வெளித்தோற்றம் நன்றாகவே இருக்கும். ஆனால் நம் மனம் மற்றும் மூளை சீரற்ற நிலையில் இயங்கும்.

பொதுவாக மனதில் பதட்டமோ, சோர்வோ ,சோம்பலோ , பயமோ மற்றும் தேவையில்லாத எண்ணங்களோ வந்து கொண்டு இருக்கும். இவை நம் மூளை மற்றும் மனதின் சீரற்ற இயக்கத்தினால் வருபவை. இந்த சீரற்ற நிலையை ஒருங்கிணைந்த சக்தியாக மாற்ற வல்லது இந்த ஓம் என்ற ஒலி.

காலையில் வயல் வெளிகளிலோ அல்லது தோட்டத்திலோ உள்ள புற்களில் பனி நிறைந்து நீர் துளிகளாக மேலே இருக்கும். அதை நாம் பார்ப்பதற்கு அழகாக தோன்றலாம். ஆனால் புற்களுக்கு தான் தெரியும் தான் கஷ்டப்பட்டு இந்த துளிகளை சுமந்து கொண்டிருக்கிறேன் என்று. அதன் பின் சூரியன் என்ற சக்தியால் அந்நீர் இழுக்கப்பட்டு விடும். இப்பொழுது அந்த புற்கள் புத்துணர்வுடன் காற்றில் ஆட தொடங்கும். இங்கே புற்களை மூளை மற்றும் மனமாகவும் , சூரியனை ஓம் என்ற ஒலியாகவும் குறிப்பிட விரும்புகிறேன். 

இதே மாதிரி நாம் காலையில் எழுந்ததும் நம் மூளையில் நீர் கோர்த்து இருக்கும். இந்த நீர் நம் வியர்வை சுரப்பிகளில் உள்ள உப்பிடம் சேர்ந்து கடின நீராக மாற்றப்படும். இந்த நீர் வெளியேற்ற படாமல் இருந்தால் நமது மூளையில் உள்ள நியூரான்கள் சிறப்பாக செயல்படாது. இதனால் தலை வலி வரலாம் அல்லது உடல் சோர்வு ஏற்படலாம். அந்த நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட முடியாது. ஓம் என்ற ஒலி எழுப்பி தியானம் செய்தால் அந்த ஒலியின் அதிர்வு நம் மூளையில் வெப்பமாக மாறும்.

இந்த வெப்பம் மூளையில் அனைத்து இடங்களுக்கும் பரவி கண்களின் வழியாக நீரை வெளி ஏற்றும். கெட்ட வாயுக்கள் வாய் வழியாக வெளியேறும். இப்போது நீங்கள் புத்துணர்வை அடைந்து விட்டீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.  

இன்னொரு உதாரணமாக பள்ளிக்கு வரும் மாணவர்கள் பல்வேறு இடங்களில் இருந்து பல்வேறு எண்ணங்களை மனதில் கொண்டு வருவார்கள். அவர்கள் அனைவரும் பள்ளியில் நூழைந்ததும் கல்வி என்ற ஒரே எண்ணம் கொண்டவர்களாக மாற்றுவதற்கே கடவுள் வாழ்த்து பாடலை பாட சொல்லி மாபெரும் ஒலியாக எழுப்புவார்கள். இந்த ஒலியே கல்வி என்ற எண்ணம் கொண்டவர்களாக மாற்றும். இந்த ஒலியே போல் பல மடங்கு சக்தி கொண்டது ஓம் என்ற ஒலி. இதை போல் பள்ளி முடிந்தவுடன் எழுப்பப்படும் ஒலி மாணவர்களை வீட்டிற்கு  போக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக மாற்றும். 

எனவே ஓம் என்ற ஒலியுடன் தியானம் செய்து ஆரோக்கியத்துடன் வாழலாம்.



          

Comments

Post a Comment

Followers

Popular posts from this blog

ஆபத்து நேரங்களில் சோடா ஏன் கொடுக்கப்படுகின்றது?

மனிதர்கள் மயக்கம் அடையும் நேரத்தில் சோடா கொடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இதன் அறிவியல் பின்னணி என்ன என்பதை காணலாம். மயக்கம் நமது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடை ஏற்படும் போது oxygen பற்றாக்குறை மூளையில் ஏற்படுகின்றது. இதனால் நாம் மயக்க நிலையை அடைகின்றோம்.  ரத்த ஓட்டம் செல்லாததிற்கு முக்கிய காரணம் இதயம் இயக்கம் சீராக இல்லாமல் மெதுவாக இயங்க ஆரம்பிக்கின்றது. இதனால் மூளைக்கு தேவையான ரத்தம் செல்வதில்லை. இதயம் சீராக இயங்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் தண்ணீர் அளவு மற்றும் இதயம் இயங்குவதற்கு தேவையான சோடியம் , பொட்டாசியம் , கால்சியம் மற்றும் மெக்னீசியம் அவசியம். இந்த அயனிகள் குறைந்தால் இதயம் இயங்க தேவையான மின்சமநிலை குறையும். முக்கியமாக சோடியம் அளவு குறையும் பொது இதயம் இயங்க தேவையான மின் சமிக்ஞைகள் (electrical signals) உற்பத்தி குறைகின்றது. இந்த மின் சமிக்ஞைகள் இதய இயக்கத்தின் வேகத்தை  அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது. இதனால் மூளை ரத்த ஓட்டம் சீராகின்றது. மயக்கம் தெளிகின்றது. இந்த சோடியம் சோடாவில் இருப்பதால்தான் சோடா கொடுக்கப்படுகின்றது.

உமிழ்நீர் சுரப்பின் பின் உள்ள அறிவியல்

நாம் சாப்பிடும் போது உணவை நன்றாக மென்று கூழ்ம நிலைக்கு மாற்றி நல்ல உணவு செரிமானத்திற்கு உமிழ்நீர் உதவுகின்றது என்பதை அனைவரும் அறிவீர்கள்.  இந்த உமிழ்நீர் எவ்வாறு மற்றும் எப்போது சுரக்கும் என்பதற்கான அறிவியல் பற்றி காணலாம்.  1. நாம் சாப்பிடும் போது வாய் அசைவு மற்றும் உணவின் சுவை நாக்கின் உணர்வு நரம்புகள் மூலமாக கடத்தப்பட்டு உமிழ்நீர் சுரப்பி தூண்டப்படுகிறது. இதனால் தேவையான அளவு உமிழ் நீர் சுரக்கின்றது. 2. அடுத்ததாக புளிப்பு சுவை உள்ள உணவு பொருட்களை சாப்பிடும் போது அதிகமாக உமிழ் நீர் சுரக்கும் உதாரணமாக புளி, ஊறுகாய் மற்றும் எலுமிச்சை இவற்றை சாப்பிடும்போது அதிகமாக சுரக்கும். ஏன் புளிப்பு சார்ந்த உணவை சாப்பிட்டால் அதிகமாக சுரக்கின்றது?  புளிப்பு உணவு மற்றும் பழங்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது எடுத்துக்கொள்ளும்போது சிட்ரிக் அமிலம் பற்களை அரித்து சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனால் புளிப்பு சுவையை அறிந்தவுடன் பற்களை பாதுகாக்க உமிழ்நீர் சுரப்பி உமிழ் நீரை சுரக்கின்றது. உண்மையில் புளிப்பு சுவை உள்ள சிட்ரிக் அமிலம் பற்களை மட்டும் அல்ல நம் உடலில் உள்ள எலும்பைக்கூட அரித்து சேதப்...

எப்போது மூளை (BRAIN) சுறுசுறுப்பாக இயங்குகிறது

எப்போது மூளை (BRAIN) சுறுசுறுப்பாக இயங்குகிறது. எந்த நிலைகளில் அதன் இயக்க நிலை மாறுபடுகிறது. நாம் தினசரி செய்யும் செயல்களான நடத்தல், உட்காருதல் மற்றும் தூங்குதல் இந்த மூன்று நிலைகளிலும் அதன் இயக்க நிலை மாறுபடும். எடுத்துக்காட்டாக நாம் பள்ளியில் படிக்கும்போது மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனித்து கொண்டிருப்போம். நேரம் ஆகும்போது சிலர் தூங்கி  விழுந்து கொண்டிருப்பார்கள். அதை சில மாணவர்கள் பார்த்து நகைத்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஆசிரியர் மட்டும் பாடம் எடுத்து கொண்டிருப்பார். அவருக்கு தூக்கம் வர சாத்தியமில்லை. ஏனென்றால் அவருடைய மூளை சிறப்பாக  இயங்கி கொண்டிருப்பதை அதற்கு காரணம். அவர் நின்றோ அல்லது நடந்து கொண்டோ இருக்கும் பொது அவர் கால்களில் உள்ள நரம்புகள் மூளையே தூண்டுவதன் மூலமாக அது சிறப்பாக  இயங்கி கொண்டிருக்கும்.  மாணவர்கள் அமர்ந்த நிலையில் இருக்கும் போது அவர்களின் கால் நரம்புகளின் இயக்கம் அதிகமாக தூண்டபடுவதில்லை இதனால்தான் அவர்கள் மூளை (SEMI ACTIVE) பாதி அளவிலான வேலையே செய்கிறது. இதனால் சிலருக்கு தூக்க நிலையை அடைவார்கள். அதனால்தான் ஆசிரியர் அவர்களை தூ...