முட்டை ஒரு சிறந்த முழு உணவாகும். முட்டையில் உள்ள உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் அதிகம். இதனால்தான் இரண்டு முட்டைகளை சாப்பிட்டால்கூட ஒரு மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி ஏற்படும். பொதுவாக பள்ளிகளில் முட்டைகள் கட்டாயமாக மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மாணவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றது. மற்றோன்று அவர்களின் மூளையின் சக்தி மற்றும் திறனை அதிகரிக்கின்றது. இதனால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க உதவுகின்றது. உதாரணமாக மூளை வளர்ச்சியில்லாத குழந்தைகள் கூட பள்ளிக்கூடத்தில் சேர்த்து முட்டை போன்ற ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது நாளடைவில் அவர்களின் மூளை திறன் அதிகரித்து அவர்களின் கல்வித்திறனும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இப்போது முட்டையில் உள்ள அறிவியலை பார்க்கலாம். கோழிகள் முட்டைகளை இடும்போது அதில் கோழிக்குஞ்சுகள் வளரத்தேவையான அனைத்து ஊட்ட சத்துக்களையும் முட்டைக்கு அளிக்கின்றது. எலும்புகள், தசைகள் மற்றும் மூளைக்கு தேவையான சத்துக்கள் அடங்கும். அதில் முக்கியமான சத்து என்னவென்றால் கோலின் ( choline ) ஆகும். கோல...