இன்று கொரோனாவின் மூச்சு திணறிலிருந்து காப்பாற்ற எண்ணற்ற ஆக்சிஜன் சிலிண்டர் மக்களுக்கு தேவைப்படும் நிலையில் இதை அரசு உற்பத்தி செய்ய தாமதம் ஆவதாலும் மக்கள் உயிர் இழப்பு ஏற்பட்டு வருகின்றன.
நமது உடலுக்கு இயற்கை கொடுத்த ஆக்சிஜன் சிலிண்டர்தான் நுரையீரல். இது கொரோனா தாக்கத்தினால் செயல் இழந்து விடுகிறது. நமது உடலில் எந்த உறுப்பும் செயல்படாத நிலைக்கு தள்ளப்படும் போது அதை சரி செய்யும் பொறுப்பு நம் சிப்பாய்களான ரத்தமே முன்னிலை வகுக்கும்.
நம் ரத்தத்தினால் சரி செய்ய முடியாத நிலையில் உயிர் இழப்பு ஏற்படும். நம் ரத்தம் சிறப்பாக செயல்பட்டு சரி செய்ய வேண்டும் என்றால் நம் நுரையீரல் வலுவாக இருக்க வேண்டும்.
ரத்தம் செயல் படுவதற்கும் நுரையீரல் வலுவாக இருப்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது. நாம் சைக்கிள் சக்கரத்தில் காற்று இல்லையென்றால் காற்றை அடித்து விட்டு வெகு தூர பயணத்தை கடக்கிறோம். அது போல நம் நுரையீரலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் போது அதை நிரப்ப வேண்டும். அதை எவ்வாறு செய்வது மூச்சு பயிற்சி , வெகுதூரம் நடத்தல் , மலை ஏறுதல் , கிணற்றில் குளித்தல் , விளையாடுதல் , உடல் பயிற்சி செய்தல், சைக்கிள் ஓட்டுதல், கோயிலுக்கு செல்லுதல், உடலை வலுவாக்குதல், மர அடியில் காற்றை வாங்குதல் இதில் ஒன்றை செய்தால் நம் நுரையீரலில் ஆக்சிஜன் நிரப்பபடும்.
இப்போது நம் நுரையீரல் வலுப்பட்டு இருக்கும். இப்போது கொரோனவால் நுரையீரலை தாக்க முடியுமா?வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். இருந்தாலும் தாக்க முற்படும். நாம் மேல சொன்ன பயிற்சிகளை கடை பிடித்து வந்திருந்தால் நம் நுரையீரல் மட்டும் வலுவடைந்து இருக்காது. நம் ரத்தமும் களத்தில் இளம் சிப்பாய்களை போருக்கு சேர்த்திருக்கும். திடீர் என்று இந்த இளம் சிப்பாய்கள் எங்கிருந்து வரும்.
நாம் பயிற்சிகளை செய்யும் போது ஆழ்ந்த மூச்சை இழுப்பதால் நம் ரத்தத்தில் புதிய ரத்த அணுக்கள் உருவாகும்.இந்த ரத்த அணுக்கள் நாம் சாதாரணமாக மூச்சி இழுக்கும் போது உருவாவதில்லை. இந்த புதிய ரத்த அணுக்கள் சிப்பாய்களாக சிறப்பாக செயல்பட்டு கொரானவை அழித்து நம் நுரையீரல் பாதிப்பை சரி செய்யும்.
இதை செய்தால் நமக்கு அரசிடம் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் தேவை இருக்காது.


Comments
Post a Comment