எப்போது மூளை (BRAIN) சுறுசுறுப்பாக இயங்குகிறது. எந்த நிலைகளில் அதன் இயக்க நிலை மாறுபடுகிறது. நாம் தினசரி செய்யும் செயல்களான நடத்தல், உட்காருதல் மற்றும் தூங்குதல் இந்த மூன்று நிலைகளிலும் அதன் இயக்க நிலை மாறுபடும். எடுத்துக்காட்டாக நாம் பள்ளியில் படிக்கும்போது மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனித்து கொண்டிருப்போம். நேரம் ஆகும்போது சிலர் தூங்கி விழுந்து கொண்டிருப்பார்கள். அதை சில மாணவர்கள் பார்த்து நகைத்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஆசிரியர் மட்டும் பாடம் எடுத்து கொண்டிருப்பார். அவருக்கு தூக்கம் வர சாத்தியமில்லை. ஏனென்றால் அவருடைய மூளை சிறப்பாக இயங்கி கொண்டிருப்பதை அதற்கு காரணம். அவர் நின்றோ அல்லது நடந்து கொண்டோ இருக்கும் பொது அவர் கால்களில் உள்ள நரம்புகள் மூளையே தூண்டுவதன் மூலமாக அது சிறப்பாக இயங்கி கொண்டிருக்கும். மாணவர்கள் அமர்ந்த நிலையில் இருக்கும் போது அவர்களின் கால் நரம்புகளின் இயக்கம் அதிகமாக தூண்டபடுவதில்லை இதனால்தான் அவர்கள் மூளை (SEMI ACTIVE) பாதி அளவிலான வேலையே செய்கிறது. இதனால் சிலருக்கு தூக்க நிலையை அடைவார்கள். அதனால்தான் ஆசிரியர் அவர்களை தூ...