கொரானாவே ஒழிக்க முடியுமா ?
கொரானாவே ஒழிப்பதுக்கு முன்னால் இதற்கு முன்னால் வந்த டெங்கு ,சிக்கன் குனியா மற்றும் ஸூவின் ப்ளூ இதை ஒழித்து விட்டோமா என்றால் கண்டிப்பாக இல்லை அவைகளும் அவ்வப்போது பார்ட் 2 பார்ட் 3 யாக ரிலீஸ் ஆகி கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு டெங்குவை உருவாக்கும் ஆர்போ வைரஸ் கொசுக்களிடமிருந்து பரவுகிறது. கண்களால் பார்க்க முடிகிற கொசுக்களின் இனங்களை 3000 அதில் சில இனங்கள் மட்டுமே இவ்வைரசே பரப்புகிறது.கொசுக்கள்தான் இதனை பரப்புகிறது என்பதை 1890 ஆம் ஆண்டிலே கண்டறியப்பட்டுள்ளது.அதன் பிறகு அனைத்து பெரிய நாடுகளும் இதனை ஒழிக்க ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதில் இந்தியா ஒதுக்கியுள்ள நிதி 6000 கோடி ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் கூடுதலாக ஒதுக்கிய நிதி 17 கோடி.
இவ்வாறு உலகம் முழுவதும் 130 ஆண்டுகளாக எவ்வளவு பெரும் தொகையே செலவு செய்திருப்பார்கள் என்று யோசியுங்கள். ஆனால் இன்று வரையில் கொசு இனங்களும் அதனால் ஏற்படும் நோய்களும் அழிந்து இருக்கின்றனவா? இல்லை. அதை ஏன் அழிக்க முடியாது என்பதை அதன் இனப்பெருக்க விதிகளை அறிந்தாலே தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் அதை ஒழிக்க ஒவ்வொரு நாடும் முயன்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு உலகம் முழுவதும் 130 ஆண்டுகளாக எவ்வளவு பெரும் தொகையே செலவு செய்திருப்பார்கள் என்று யோசியுங்கள். ஆனால் இன்று வரையில் கொசு இனங்களும் அதனால் ஏற்படும் நோய்களும் அழிந்து இருக்கின்றனவா? இல்லை. அதை ஏன் அழிக்க முடியாது என்பதை அதன் இனப்பெருக்க விதிகளை அறிந்தாலே தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் அதை ஒழிக்க ஒவ்வொரு நாடும் முயன்று கொண்டிருக்கிறது.
கண்ணுக்கு தெரிந்த கொசுக்களையே நம்மால் அழிக்க முடியாது என்பதுதான் நிஜம். பின் கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமிகளே எப்படி ஒழிக்க முடியும். கிருமிகளின் எண்ணிக்கையே 15 இலட்சம் இதில் 5 சதவீத கிருமி இனங்கள் நம் வியாதிக்கு காரணமாக அமைகிறது. இப்படி நுண்நோக்கிகளால் கூட கண்டுபிடிக்க முடியாத கிருமிகளை அழிக்க முடியுமா? அப்படியே மருந்துகள் கண்டுபிடிக்கலாம் என்றாலும் அது சந்தைக்கு வருவதுக்கு 10-15 வருடங்கள் ஆகிவிடும். அதற்குள் புது கிருமியை உருவாகிவிடும்.
பிறகு எப்படித்தான் அழிப்பது? எப்போது நோய் வந்தாலும் அந்த நோய்க்கான மருந்து
அதன் அருகிலேயே தான் இருக்கும். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால்
டெங்கு வரும் பொது அது குடும்பத்தில் உள்ள சிலருக்குத்தான் பாதிப்பே ஏற்படுத்தி இருக்கும் மற்றவர்கள் நலமாகவே இருப்பார்கள். ஏன் அவர்கள் மட்டும் பாதிக்க படவில்லை? அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். இப்ப மட்டுமில்லை இந்த நோய் கிருமிகளின் தாக்கத்திற்கு எந்த காலத்திலும் இந்த நோய் எதிர்ப்பு சக்தியே பதிலாக இருக்கும். இதனால் எந்த மருந்திற்கும் நீங்கள் காத்து கொண்டிருப்பது தீர்வாகாது.
இந்த நோய் எதிர்ப்பு சக்தியே எப்படி அதிகரிப்பது என்பதை நான் புதிதாக
சொல்ல வேண்டியதில்லை. நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கும்
பின்னாடி உள்ள நன்மையே கண்டறிந்து பின்பற்றுங்கள் அதுவே உங்களுக்குள் சக்தியே
உண்டாக்கி விடும். இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் உங்கள் உடம்பினே
எந்த வகையிலும் கெடுத்து கொள்ளாமல் இருந்தால் உங்கள் உடலே இந்த கிருமிகளே
பார்த்து கொள்ளும்.
உங்களுக்கு வேண்டுமானால் இந்த வைரஸ் கிருமிகள் உங்கள் கண்ணுக்கு தெரியாத
எதிரியாக இருக்கலாம். ஆனால் உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் இது
கண்ணுக்கு தெரிந்த எதிரியே. நம் நோய் எதிர்ப்பு செல்கள் உங்களுக்காக அந்த
கிருமிகளிடம் போரிடும். நன்றி !

Super ji super ji..
ReplyDelete