இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் மஞ்சள் காமாலையால் இறந்து விட்டாள்.
அவளுக்கு நான்கு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. அக்குழந்தை அம்மாவை தேடி அழுது கொண்டிருக்கிறாள்.
அவள் இறப்பதற்கு முன் மதிய வேளையில் கடும் வயிற்று வலி வந்து வாந்தி எடுத்துருக்கிறார். அவர் கணவர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவர் குளுகோஸ் ஏற்றி விட்டு சரியாகிவிடும் என்று அனுப்பித்து வைத்துள்ளார்கள்.
இரவு வேளையில் மறுபடியும் வலி ஆரம்பித்து உள்ளது. மறுபடியும் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்துள்ளனர்.ஸ்கேனை பார்த்த மருத்துவர் உடல் உறுப்புகள் ஆன கல்லிரல் கணையம் அழுகி விட்டதாகவும் இனி காப்பாற்றுவது கடினம் என்றும் தெரிவித்துள்ளனர். சரியாக அதிகாலை 4 மணிக்கு அப்பெண் இறந்துள்ளார்.
அவர் கணவர் தெரிவித்தது அப்பெண்ணுக்கு தினமும் இரவு வாந்தி வரும் என்றும் அப்புறம் மாத்திரை எடுத்து கொண்டதும் சரியாகி விடும் என்றும் மருத்துவமனைக்கு செல்வதை வேண்டாம் என்றும் தவிர்த்து வந்துள்ளார். அவருக்கு அப்போது இது மிகப்பெரிய பிரச்சனை என்று அவருக்கு தெரியவில்லை. அவருக்கு மட்டுமில்லை பல பெண்களுக்கும் இது தெரிவதில்லை.
வாந்தி நமக்கு அடிக்கடி வருகிறது என்றால் கல்லிரல் சிறப்பாக செயல் பட முடிவதில்லை என்றே பொருள். பொதுவாக இரவு 11 மணியில் இருந்து 3 மணி வரை நமது கல்லிரல் சிறப்பாக செயல் பட்டு செரிமானம் அடையும் நேரம்.அதுவும் இந்த நேரத்தில் நாம் தூங்கி கொண்டிருந்தாள் மட்டுமே இது சிறப்பாக நடை பெரும். இல்லையென்றால் நமது செரிமானம் தடைபட்டு எதிர்ப்பு சக்தி உருவாகாமல் தடை பட்டு விடும். இந்த நேரத்தில் நமது உணவு வாந்தியாக வெளி தள்ளப்படுகிறது என்றால் நமது கல்லிரல் கணையம் போன்ற உறுப்புகள் செயல்பாடு சரியாக இல்லை என்பதை உணர்த்துகிறது.
இதற்கு தக்க உடல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். வருமுன் காப்பதை நன்று. நன்றி

Comments
Post a Comment