தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் உடையது. இது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இதன் பயன்பாடு மக்களிடத்தில் குறைவாகவே உள்ளது. இது மக்களிடத்தில் பயன்படுத்தபடுமாயின் எந்த ஒரு நோயும் மக்களுக்கு வராமல் காக்கும். ஏனென்றால் இது மிகச்சிறந்த கிருமி நாசினியாகும்.
தேனீக்கள் தன் உணவாக தேனை சேமித்து வைக்கிறது. குளிர் காலங்களில் பூக்கள் மலராததால் அந்த நேரங்களில் சேமித்து வைத்த தேனை உணவாக எடுத்து கொள்கிறது. பலவிதமான பூக்களில் இருந்து தன் உறிஞ்சு குழல்களின் மூலம் தேனை உறிஞ்சு தன் உடலில் அதை பிரக்டோஸ் என்ற இனிப்பு தன்மை உள்ள பொருளாக மாற்றுகிறது.
இதை தன் தேன் கூட்டினுள் கொண்டு சேர்க்கும். இந்த தேனில் உள்ள நீர் காற்றினால் ஆவியாகாமல் இருக்க குளுக்கோஸ் ஆக்ஸிடைஸ் என்ற நொதி நீரினை ஹைட்ரஜன் peroxide (H2O2) ஆக மாற்றுகிறது. Hydrogen Peroxide ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. எந்த ஒரு பாக்டீரியா அல்லது மிகச்சிறிய நுண்ணுயிரிகளால் தேனை கெட்டு போகச்செய்ய முடியாது. இதனால்தான் தேன் ஒரு தேவாமிர்தம் ஆக கருதப்படுகிறது.
இது தேனீக்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்படுகிறது. இதனால் தேனை மிகச்சாதாரண ஒரு பொருளாக மட்டும் பார்க்க முடியாது. ஏனெனில் இந்த தேனை மனிதர்கள் உட்கொண்டால் இதில் உள்ள H2O2 நம் உடலில் கிருமி நாசினியாக செயல்பட்டு பாக்டீரியாக்களை அளிக்கிறது. மேலும் இது நீராகவும் ஆக்ஸிஜன் ஆக பிரிந்து உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு சேர்க்கிறது. இதனால் நம் உடலுக்கு மிகச்சிறந்த ஆற்றல் கிடைக்கும். இது மூச்சு இளைப்பு மற்றும் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் இதை உட்க்கொன்டு விரைவாக குணமடையலாம். இது எல்லாவிதமான நோய்களுக்கும் மிகச்சிறந்த நிவாரணி ஆகும்.
2 H2O2 → 2 H2O + O2
இதை நீண்ட நாட்களாக ஆறாமல் உள்ள புண்களை இதை தடவி வந்தால் விரைவில் குணம் அடையும். உடல் பருமன் உள்ளவர்கள் இதை எடுத்து கொண்டால் உடல் எடை குறையும். தோலில் உள்ள புண்கள் மற்றும் மருக்கள் மறைய இதை எடுத்து கொண்டு பயன் பெறலாம். இருமல் மற்றும் சளி தொல்லை உள்ளவர்கள் இதை எடுத்து கொண்டால் மிகசிறந்த நிவாரணம் கிடைக்கும். இதை வாரத்திற்கு 2 அல்லது மூன்று முறையாவது எடுத்துக்கொண்டு பயனடையுங்கள். வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக இதை எடுத்துக்கொண்டால் நல்லது.
Comments
Post a Comment